திண்டுக்கல் : இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் : இரண்டாயிரம் ரூபாய்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் ஒட்டியதால் பரபரப்பு.!!

இந்தியாவில், புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு மேல் செல்லாது என்றும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதற்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பேருந்து நிலையம் அருகிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. 

அதில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு மாதிரி அச்சிடப்பட்டு, அதன் கீழே பிறப்பு 8-11-2016, இறப்பு 19-05-2023, உள்ளிட்டவை எழுதப்பட்டிருந்தது. மேலும், பாஜக அரசால் உருவாக்கப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டு 19-05-2023 அன்று மாலை அகால மரணமடைந்தது. 

அதன் இறுதி ஊர்வலம் 20-05-2023 அன்று மாலை 4 மணிக்கு சாலை ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று எழுதப்பட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து நேற்று மாலை திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் திரண்டு கட்டு, கட்டாக 2 ஆயிரம் மாதிரி ரூபாய் நோட்டுகளை பாடை கட்டி, அதில் நோட்டுகளை போட்டு பாடையை சுற்றி ஒப்பாரி வைத்தனர். 

அப்போது சங்கு ஊதி, மணி அடிக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது. அதன்பிறகு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இந்த தொடர்பான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tear tribute poster viral of 2000 notes in dindukal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->