#BREAKING || தமிழகத்தில் நாளை நடக்க இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு - பள்ளிக்கல்வி ஆணையர்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அதே சமயத்தில், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே பள்ளியில் முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்குத் தான் இட மாறுதலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முன்பாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டால்,  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு  விரும்பிய இடமாறுதல் கிடைக்காது என்று, முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும், உயர்நீதிமன்றத் தடையை விலக்கச் செய்து முதலில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வையும், பின்னர் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வையும் நடத்த வேண்டும். அது தான் அனைவருக்கும் சமவாய்ப்பு, சமநீதி வழங்குவதாக அமையும் என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், நாளை முதல் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TeachersExam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->