2026 தேர்தல் வியூகம்: ‘விஜய் செய்தி சேனல் ஆரம்பிக்கப் போறாரு! கோடிகளை இறங்கிய ஆதவ் அர்ஜுனா? சேனல் பேரு என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தனது அரசியல் வியூகங்களை வேகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், கட்சி செய்திகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் நோக்கில் புதிய தொலைக்காட்சி ஒன்றை தொடங்கும் முடிவுக்கு அவர் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘வெற்றி தொலைக்காட்சி’ என்ற பெயரில் தொடங்கப்பட உள்ள இந்த சேனலுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளரான ஆதவ் அர்ஜுனா நிதி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொலைக்காட்சி தொடங்குவதற்கான அனுமதி பெறும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன என்றும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் உரிய விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் பெயரில் நேரடியாக சேனல் இயங்காமல், தனி மீடியா நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அதன் கிளை நிறுவனமாக ‘வெற்றி தொலைக்காட்சி’ செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகம் தற்போது மாவட்ட ரீதியாக பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அடுத்த கட்டமாக தொகுதி வாரியான பிரச்சாரத்திற்கும் தயாராகி வருகிறது.

சமூக வலைதளங்களில் தவெகுக்கு நல்ல ஆதரவு இருந்தாலும், கிராமப்புற மக்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அந்த தாக்கம் குறைவாக இருப்பதை கவனித்த விஜய், அவர்களை சென்றடைய தொலைக்காட்சி ஊடகமே சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊடக ஆதரவை பெற்றுள்ள சூழலில், தவெகவும் தனி ஊடக அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்கிறது.

இந்த தொலைக்காட்சியை செயல்படுத்துவதற்காக தொழில்நுட்ப கட்டமைப்பு, செய்தி பிரிவு, ஆசிரியர் குழு, செய்தியாளர்கள், எடிட்டர்கள், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பெரும் அமைப்பை உருவாக்க வேண்டிய நிலையில், தமிழக ஊடகங்களில் பணியாற்றி வரும் சில முக்கிய ஊடகவியலாளர்களுடன் ஆதவ் அர்ஜுனா மூலம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கு முன்பாக, குறிப்பாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திலேயே ‘வெற்றி தொலைக்காட்சி’ ஒளிபரப்பை தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2026 Election Strategy Vijay is going to start a news channel Is it Adav Arjun who has landed crores Do you know the name of the channel


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->