தெற்கு பிரேசிலில் சூறாவளி அதிர்ச்சி: 24 மீ உயர சுதந்திர தேவி சிலை வீழ்ந்து நொறுங்கியது...! -வைரல் வீடியோ - Seithipunal
Seithipunal


தெற்கு பிரேசிலில் ஹவன் வணிக வளாகம் முன்பாக வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடும் சூறாவளிக் காற்றால் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த அதிர்ச்சிகர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் விரைவாக வைரலாகியுள்ளது.

குவைபா நகரில் பரபரப்பான சாலையில் வாகனங்கள் தொடர்ந்து பயணிக்கும் நேரத்தில் சிலை கீழே விழுந்ததாலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கடுமையான காற்றுக்காக பொதுமக்கள் வீட்டில் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

சிலையை அதே இடத்தில் மீண்டும் நிறுவவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hurricane shock southern Brazil 24 meter tall Statue of Liberty falls and collapses Viral video


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->