கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த பாஜக! தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராகிய பாஜக மாஸ்டர்மைண்ட்! பரபரக்கும் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் வியூகத்தில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹொல் ஆகிய இரு மத்திய அமைச்சர்கள் துணை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழக தேர்தல் பணிகளை நேரடியாக மத்திய அமைச்சர்கள் கண்காணிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதற்கு முன்பு தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக பாஜக தேசிய துணைத் தலைவர் பையஜயந்த் பாண்டா நியமிக்கப்பட்டிருந்தார். பீகார் தேர்தலில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட கூட்டணி மாடலை தமிழ்நாட்டிலும் பயன்படுத்தும் நோக்கில் அவர் களமிறக்கப்பட்டார்.

அந்த அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாஜக – அதிமுக உறவை வலுப்படுத்தி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பிரிந்த தலைவர்களையும் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கவில்லை என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் இணைப்பு ஏற்படவில்லை. டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வரவும் முடியவில்லை.

மேலும் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளையும் NDA கூட்டணியில் இணைக்க பாண்டா முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதற்கிடையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததும், அதிமுகவில் இருந்து மேலும் சில முக்கிய தலைவர்கள் வெளியேறலாம் என்ற தகவல்களும் பாஜக தலைமையை கவலைக்குள் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், அதிமுக உட்கட்சி மோதல்களை கையாள்ந்த அனுபவம் கொண்ட பியூஸ் கோயலை மீண்டும் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமித்து பாஜக புதிய வியூகத்தை தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவது, புதிய கூட்டணி கட்சிகளை இணைப்பது மற்றும் களப்பணியை தீவிரப்படுத்துவது ஆகிய பணிகளில் பியூஸ் கோயல் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP has taken up its last weapon BJP mastermind is in charge of Tamil Nadu BJP elections The political arena is in turmoil


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->