புதிய கட்சி தொடங்கிய ஓபிஎஸ்? மீண்டும் என்டிஏவில் இணைகிறாரா ஓபிஎஸ்? அப்போ அந்த விஷயம் அவருக்கு ஓகேதானா?
OPS has started a new party Will OPS join the NDA again So is that okay with him
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவார் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனி அணியாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ், இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் அமைப்பை நடத்தி வந்த நிலையில், தற்போது அதை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடாத போதிலும், சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘மீட்புக் கழகம்’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பது புதிய கட்சி தொடங்கியதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.
அதிமுக ஒன்றிணைப்பு முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்த ஓபிஎஸ், டெல்லியில் பாஜக தலைமையிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார். சமரசம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவர் புதிய அரசியல் பாதையை தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, தலைமைக் கழக முகவரியும் பசுமை வழிச்சாலையிலிருந்து நந்தனத்திற்கு மாற்றப்பட்டிருப்பதும் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் அமித்ஷா இன்று தமிழகம் வருவதையடுத்து, அவரை நேரில் சந்தித்து ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதே காரணத்தால் டிடிவி தினகரன் முன்பு என்டிஏவில் இருந்து வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், தினகரன் அமமுகவை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஒன்றிணைந்த அதிமுக மீண்டும் உருவாகுமா அல்லது அரசியல் பிளவு மேலும் ஆழமடையுமா என்ற சந்தேகம் அரசியல் அரங்கில் வலுத்து வருகிறது.
English Summary
OPS has started a new party Will OPS join the NDA again So is that okay with him