இன்று ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.!
Teachers transfer Counseling from today
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கம்.
இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான தேதி 2 முறை அறிவிக்கப்பட்டது.
ஆனால், நிர்வாக காரணங்களுக்காக பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்றும், நாளையும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, தொடக்கப்பள்ளி இயக்ககத்தின் கீழ் செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
English Summary
Teachers transfer Counseling from today