இரண்டு மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மூடல் - காரணம் என்ன?
tasmac shop close today in madurai and ramanathapuram
இரண்டு மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மூடல் - காரணம் என்ன?
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று ஏராளமானோர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
tasmac shop close today in madurai and ramanathapuram