டாஸ்மாக் மது குவாட்டருக்கு ரூ.10 உயர்த்தப்படுகிறதா?!
TASMAC Liquor price may be hike
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது கடைகளின் மூலமாக அரசுக்கு ஆண்டு வருமானமாக சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி வருகிறது.
2023 மார்ச் 31ஆம் தேதி டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 5329 ஆக இருந்தது. அண்மையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், கல்லூரி, பள்ளிக்கூடம் செயல்படும் பகுதிகளில் செயல்பட்டுவந்த 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
500 மது கடைகளை மூடியத்தால் தற்போது தமிழகம் முழுவதும் 4829 டாஸ்மாக் மது கடைகள் செயல்படுகின்றன.

இந்நிலையில், மதுபானங்களின் விலையை பிராண்டுக்கு ஏற்ப 10 ரூபாய் முதல் 80 ரூபாய் விலை உயர்த்த அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உலவி வருகிறது.
டாஸ்மாக் மதுபானங்களின் விலையை தற்போது உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், விலையை உயர்த்த அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக உலாவரும் தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TASMAC Liquor price may be hike