பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் முடக்கம்.? ஆர்.டி.ஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயல்பட்டு வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு முதல் பழங்குடியினருக்கென பிரத்யேகமாக தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் இயக்குநரகம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பழங்குடியினர் மக்களின் நலனுக்காக செயல்பட்டு வந்த ஆன்றோர் மன்றத்தின் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டு கடந்த 2018-ம் அதே ஆண்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

அந்த புதிய அரசாணையின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் அமைச்சர் தலைவராக கொண்ட பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தில் செயலர், இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர்கள், பழங்குடியினர் அலுவல்சாரா உறுப்பினர்கள், பழங்குடியினர் அல்லாத அலுவல்சாரா உறுப்பினர்கள் என்று மொத்தம் 20 பேர் கொண்ட நிபுணர்கள் குழு கடந்த 2018 பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதியோடு ஆன்றோர் மன்றத்தின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அதன் பிறகு மன்றத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளதால் பழங்குடியினர் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் ஆன்றோர் மன்றத்திற்கான கூட்டங்கள் நடைபெறவில்லை என்பதை தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகத்தின் பொது தகவல் அலுவலர் வாயிலாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலின் படி " பழங்குடியினருக்கான ஆன்றோர் மன்றம் இரண்டு ஆண்டுகளாக செயல்படவில்லை. உறுப்பினர்கள் நியமனம் புதுப்பிக்காததால் பழங்குடியினருக்கான ஆன்றோர் மன்றம் மன்றம் முடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத் துறை (Tamilnadu government Tribal Welfare department) கடந்த 2018-2019, 2019-2020 மற்றும் 2020-2021 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.265 கோடி நிதியை பயன்படுத்தாமல் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிதி வனத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளத" என்பது ஆர்டிஐ தகவல் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu Tribal People Forum freezes


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->