திரு.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் நினைவு தினம்!.
Mr Pattukkottai Kalyanasundaram Memorial Day
பொதுவுடமைக் கருத்துக்களைத் திரைப்படங்களில் எளிய தமிழில் கொண்டு சேர்த்த 'மக்கள் கவிஞர்' திரு.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் நினைவு தினம்!.
பிரபல கவிஞர், சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு (சங்கம்படைத் தான்காடு) என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவர் சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். கருத்தும், கற்பனையும் நிறைந்த இவரது பாடல்களை ஜனசக்தி பத்திரிக்கை வெளியிட்டு வந்தது.
இவர் தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம். படித்த பெண் திரைப்படத்துக்காக 1955ஆம் ஆண்டு முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை பதித்தார்.
சின்னப் பயலே சின்னப் பயலே, தூங்காதே தம்பி தூங்காதே ஆகிய குறிப்பிடத்தக்க காலத்தால் அழியாத பாடல்களை வழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29வது வயதில் 1959 அக்டோபர் 8 ஆம் தேதி அன்று மறைந்தார்.

விடுதலைப் போராட்ட வீரர் திரு.ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள் நினைவு தினம்!.
ஜெயபிரகாஷ் நாராயண் (Jayaprakash Narayan) (அக்டோபர் 11, 1902 - அக்டோபர் 8, 1979), பரவலாக JP என அறியப்பட்டவர், இந்திய விடுதலை இயக்கத்தில் பங்காற்றிய விடுதலை வீரர் மற்றும் 1970களில் இந்திரா காந்தியை எதிர்த்து போராடிய அரசியல் தலைவர். தமது அமைதியான முழு புரட்சி (Total Revolution) என்ற முழக்கத்திற்காக பரவலாக அறியப்பட்ட சோசலிசவாதி. 1977ஆம் ஆண்டு உருவான ஜனதா கட்சி அரசுக்கு வித்திட்டவர்.1998ஆம் ஆண்டு, அவரது மறைவிற்கு பிறகு, அவராற்றிய சமூகப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.1965ஆம் ஆண்டு தமது பொதுச்சேவைக்காக மக்சேசே பரிசு வழங்கப்பட்டது.
English Summary
Mr Pattukkottai Kalyanasundaram Memorial Day