மாநகராட்சி கட்டிடத்தில் முதல்வர் மருந்தகம் ; மேயர் பிரியா திறந்து வைத்தார்...!
Chief Ministers pharmacy at the municipal building inaugurated by Mayor Priya
சென்னை எழும்பூர் பெரியமேடு பகுதியில் உள்ள ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி கட்டிட வளாகத்தில் முதல்வர் மருந்தகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. சென்னை மேயர் பிரியா முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,சென்னை மேயர் பிரியா ரிப்பன் கட்டட வளாகத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சியின் புதிய கட்டடத்தில் முதல்வர் மருந்தகத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட முதல்வர் மருந்தகம் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்து கடைகள் மூலம் ஜெனரிக் வகை மருந்துகளைக் குறைந்த விலையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவருக்கும் தரமான மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில் 44 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவற்றுள் 9 மருந்தகங்கள் தொழில் முனைவோர்களும், 35 மருந்தகங்கள் கூட்டுறவு நிறுவனங்களாலும் நடத்தப்பட்டு வருகிறது.
முதல்வர் மருந்தகத்தில் கொள்முதல் விலையிலிருந்து 25% தள்ளுபடியில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதால், மக்கள் மருந்தகத்தை விட விலை மிகவும் குறைவாக இருக்கிறது.
முதல்வர் மருந்தகத்தில் தனியார் மருந்துக் கடைகளை விட 75% வரை விலை குறைவாகக் கிடைக்கிறதது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chief Ministers pharmacy at the municipal building inaugurated by Mayor Priya