300 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை..எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார் !
Old age assistance granted to 300 beneficiariesopposition leader Siva distributed it
வில்லியனூர் தொகுதியில் 300 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ஆணைஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !
புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் மாநிலம் முழுவதும் முதியோர், விதவை, முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் என 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 18–ஆம் தேதி முதல்வர் அவர்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியில் புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், முதிர் கன்னிகள், திருநங்கைகள் ஆகியோர் என் 300 பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று வில்லியனூர் சண்முகா திருமண நிலையத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு அரசின் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார்.
இதில், மகளிர் மற்றும் மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு.மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், தொமுச தலைவர் அங்காளன், ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், துணை அமைப்பாளர்கள் சரவணன், காசிநாதன், ராமதாஸ், கோபி, காளி, தொகுதி அவைத்தலைவர் ஜலால் அனீப், துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, பொருளாளர் கந்தசாமி, கிளைக் கழக நிர்வாகிகள் சபரிநாதன், ராஜி, ரபீக், முத்துப்பாண்டி, பாண்டியன், பாலகுரு, சுரேஷ், கமால் பாஷா, ரஜினி முருகன், அன்பு, வாசு, அன்பு நிதி, தட்சிணாமூர்த்தி, கலியமூர்த்தி, மோகன், ராஜேந்திரன், வராதாஜன், அருள்மணி, சேகர், வேல்முருகன், ஜீவா, ராமஜெயம், கார்த்திகேயன், ராஜா முகமது, மனோகர், ரகு, ராஜேஷ், கோவிந்தராஜ், அஞ்சாப்புலி, காளிதாஸ், தாமஸ், கோதண்டம், அசார், கோபி, அருள், ஏழுமலை, ஸ்ரீராம், செல்வம், பூபேஷ், விந்தியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று வழங்கி முதியோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் 101 வயது பூர்த்தி அடைந்த சண்முகநாதன் என்பவர் ஆணை பெற்றார். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் பிறந்து 50 வயதில் வள்ளலார் சன்மார்க்க நெறியில் தம்மை இணைத்துக் கொண்டு, சன்னியாசம் பூண்ட இவர் புலால் உண்ணக்கூடாது என்ற சன்மார்க்க நெறியை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தமது 101 வயதிலும் தளராது பிரச்சாரம் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Old age assistance granted to 300 beneficiariesopposition leader Siva distributed it