பேருந்தை தொடர்ந்து, சிறப்பு இரயில் சேவை தடையும் நீட்டிப்பு.. கண்ணீரில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை சிறப்பு இரயில்கள் இரத்து செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பாக சிறப்பு இரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. 

இது குறித்த கோரிக்கையை ஏற்ற தென்னக இரயில்வே நிர்வாகம், ஜூலை 15 ஆம் தேதி வரை சிறப்பு இரயில்கள் சேவையை ரத்து செய்வதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது இது மேலும் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னக இரயில்வேயின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவல் தீவிரத்தின் காரணமாக ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு இருந்த சிறப்பு இரயில்களின் தடையை மேலும் நீட்டிப்பு செய்து, ஜூலை 31 ஆம் தேதி வரை கீழ்காணும் இரயில்கள் இயங்காது என்று அறிவித்துள்ளது.

முன்னதாக இயங்கிய திருச்சி - நாகர்கோவில், கோவை - அரக்கோணம், திருச்சி - செங்கல்பட்டு, மதுரை - விழுப்புரம், கோவை - காட்பாடி, கோவை - மயிலாடுதுறை உள்ளிட்ட பல சிறப்பு இரயில்கள் வரும் திங்கட்கிழமை முதல் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Special Sharmik Train cancelled till 31 July 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->