உங்களின் பிரச்சனை என்ன?.. முதல்வரின் தனிப்பிரிவுக்கு இணையவழியில் புகார் அளிக்க ஏற்பாடு.!
Tamilnadu Govt Announce CM Cell Online Complaint 9 June 2021
பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், அதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணும் வகையில் முதல்வரின் தனிப்பிரிவு புகார் மையம் தொடங்கப்பட்டது. அஞ்சல் வழியாக இந்த தபால்கள் முதலில் அனுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சரிடம் பொதுமக்கள் எளிமையாக புகார் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார்கள் இணையம் வழியாக பொதுமக்கள் அளிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள்ளேயே இருந்து வரும் நிலையில், அவர்களின் வசதிக்காக இணையவழியில் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த புகார்களின் நிலை தொடர்பாக புகார் கொடுத்தவர்கள் அறிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tamilnadu Govt Announce CM Cell Online Complaint 9 June 2021