3 முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்! நிலுவையில் இன்னும் 5 மசோதாக்கள் என்னென்ன?! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மூன்று முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள்:

உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகம்: உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதா.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்: தமிழ்நாடு ஊராட்சிகள் ஐந்தாம் திருத்தச் சட்ட மசோதா.

தொழிற்கல்வி நிலையங்கள் சேர்க்கை: தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட மசோதா.

இந்த மூன்று மசோதாக்களுக்கும் ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்ததன் மூலம் அவை சட்டமாகியுள்ளன.

நிலுவையில் உள்ள மசோதாக்கள்:

சட்டமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் மொத்தம் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், 9 மசோதாக்களுக்கு கடந்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான ஒரு மசோதா மட்டும் திரும்பப் பெறப்பட்டது.

தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 17 மசோதாக்களில், தற்போதுள்ள நிலவரப்படி மேலும் 5 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu Governor RN Ravi 3 bills approves


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->