தமிழகத்தில் வரும் 5 ஆம் தேதி பொது விடுமுறை - காரணம் என்ன?
tamilnadu government announce public holiday at coming 5th
இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானதாக கொண்டாடப்படும் மிலாடி நபிக்கான பிறை நேற்று வானில் தென்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தலைமை காஜி அறிவிப்பின்படி, வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி மிலாதுன் நபி கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழா இறைத் தூதர் நபி முகமது அவர்கள் பிறந்த நாளைக் குறிக்கும். இந்த நாளில், இஸ்லாமியர்கள் புனித குர்ஆனை வாசித்து, இறைவனைத் தொழுது சிறப்பு வழிபாடுகளை செய்வது வழக்கம்.

இந்த நிலையில், உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாகக் கொண்டாடும் மிலாதுன் நபி பண்டிகை, தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அன்றைய தினத்தை தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. அந்த நாளில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilnadu government announce public holiday at coming 5th