இன்று 15,759 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று (கடந்த 24 மணிநேரத்தில்) ஒரேநாளில் 15,759 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 23,24,597 ஆக உயர்ந்துள்ளது. இன்று 378 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 28,906 ஆக உயர்ந்துள்ளது. 29,243 பேர் பூரண நலன் பெற்றதை தொடர்ந்து, மொத்த பூரண நலன் பெற்றோரின் எண்ணிக்கை 21,20,889 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,223 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,23,123 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.88 இலட்சமாக இருக்கிறது. 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 2,056 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த சில வாரமாக கொரோனா பரவல் உச்சத்தில் இருந்து மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும் 1 முதல் 2 வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Corona Virus Update 11 June 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal