வேளான் சட்டத்தில் உள்ள எந்த அம்சத்தால், விவசாயிகளுக்கு பாதிப்பு?.. விளக்கம் அளிக்க தயார் - தமிழக முதல்வர்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " வேளாண் சட்டத்தால் எந்த விவசாயிக்கு? எந்த பாதிப்பு ஏற்படும்?. வேளாண் சட்டம் இடைத்தரகர்களை ஒழிக்கும் வகையில் உள்ளது. வேளாண் சட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்கள் என்ன?. 

வேளாண் சட்டத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக உள்ள அம்சத்தை கூறினால் விளக்கம் அளிக்க தயார். பொத்தாம் பொதுவாக வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பு என்றால், அதை ஏதன் அடிப்படையில் எதிர்த்து வருகின்றனர். 

விவசாயிகளுக்கு இலாபம் அளிக்கும் எந்த சட்டத்தையும் தமிழக அரசு கட்டாயம் ஆதரிக்கும். இந்த வேளாண் சட்டத்தால் விவசாயி தனது விளை பொருட்களை எங்கு வேண்டும் என்றாலும் கொண்டு சென்று விற்பனை செய்யலாம். விவசாயி விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்துகொள்வதால், விவசாயி தனது பொருட்களை இலாபமாக விற்பனை செய்கிறார். இந்த சட்டத்தை எதற்கு எதிர்க்கிறோம் என்று தெரியாமேலேயே பலரும் எதிர்த்து வருகின்றனர் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet 9 December 2020


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal