கப்பலோட்டிய தமிழனுக்கு மரியாதை செலுத்த இருக்கும் தமிழக முதல்வர்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை, வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு  மரியாதை செலுத்துகிறார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- 

தமிழ்நாடு அரசின் சார்பில், (வ.உ.சி.) என்று அழைக்கப்படும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில், சென்னை ராஜாஜி சாலையில் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட உள்ள உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்த இருக்கிறார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

மேலும், விழாவை முன்னிட்டு சென்னை, கலைவாணர் அரங்கில் 'கப்பலோட்டிய தமிழன்' படம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கும், 6-ந்தேதி காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கும் என 2 காட்சிகளாக 'டிஜிட்டல்' முறையில் திரையிடப்படவுள்ளது. அனுமதி இலவசம். என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu chief minister respet kappalottiya thamizhan statue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->