தாலியை கழற்றுவது கணவனை மன ரீதியாக துன்புறுத்துவதற்கு சமம்.. சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


ஈரோட்டை சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், என் மனைவி அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார்.

எனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கூறி, அவர் என்னை மன ரீதியாக துன்புறுத்தி வருகிறார். எனவே, மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்தும், தனக்கு விவாகரத்து வழங்க கோரியும், பேராசிரியர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி, சௌந்தர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: பணியிடத்துக்கு சென்று, கணவரை பற்றி அவதூறு பரப்பியது, மன ரீதியில் துன்புறுத்துவதற்கு சமம்.

மேலும், வழக்கு விசாரணையின்போது, கணவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றி விட்டதாக மனைவி கூறியதும் கூட, கணவரை மன ரீதியாக துன்புறுத்துவதற்கு சமம்.எனவே, கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது.

தாலி என்பது கணவன் உயிருள்ள வரை பெண்கள் அணிந்திருக்கும் நிலையில், அவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றியது சம்பிரதாயமற்ற செயல்' என நீதிபதிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taking off the thali is tantamount to mentally harassing the husband


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->