பேசுவதெல்லாம் பேசிவிட்டு, நீதிமன்றத்தில் காத்திருக்கும் எஸ்.வி.சேகர்.!!
SV Sekar apply anticipatory bail
பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் தேசியக் கொடியை அவமதித்ததாக கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
மேலும், தமிழக முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியும், தேசியக் கொடியை அவமதித்தும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராஜரத்தினம் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக பிரமுகரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொடியை மத அடையத்துடன் ஒப்பிட்டு பேசி அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக எஸ்.வி.சேகர் மீது புகார் எழுந்த நிலையில், சட்ட ஆலோசனைக்கு பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி சேகர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
தேசியக்கொடியை மத அடையாளங்கள் ஒப்பிட்டு அவமதித்ததாக எஸ்.வி சேகர் மீது வழக்கு பதிவு வழக்கு பதியப்பட்டு உள்ளதால் கைது நடவடிக்கையை தவிர்க்க முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
SV Sekar apply anticipatory bail