இடதுசாரிகளின் அழுத்தத்தால் சுதர்ஷன் ரெட்டி வேட்பாளர்!சுதர்ஷன் ரெட்டி நக்சல் ஒரு ஆதரவாளர்: அமித்ஷா குற்றச்சாட்டு!
Sudarshan Reddy is a candidate due to pressure from the Left Sudarshan Reddy is a Naxal supporter Amit Shah alleges
கேரளாவின் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரிகளை கடுமையாக குற்றம்சாட்டினார்.
அமித் ஷா பேசியதாவது:“இடதுசாரிகளின் அழுத்தத்தால்தான் காங்கிரஸ் கட்சி முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது” என்றார்.
சுதர்ஷன் ரெட்டி யார் என்பது கேரள மக்களுக்கு தெரிய வேண்டும். அவர் நீதிபதியாக இருந்தபோது சத்தீஸ்கரில் நக்சல் பிரச்சினையை ஒழிக்க உருவாக்கப்பட்ட சல்வா ஜுடும் அமைப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியவர்.
அவர் அப்படிப்பட்ட தீர்ப்பு வழங்காமல் இருந்திருந்தால், 2020-ம் ஆண்டுக்குள்ளாகவே நக்சல் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தை ஒழித்திருக்க முடியும் என்றும் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
மேலும் அவர்,“சுதர்ஷன் ரெட்டி உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தி நக்சல்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர். அவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்திருப்பது, இடதுசாரிகளின் அழுத்தத்தின் விளைவு.இதை கேரள மக்கள் போகப்போக நன்றாக உணர்வார்கள்” என்று தெரிவித்தார்.
சல்வா ஜுடும் விவகாரம்
2005-ம் ஆண்டு சத்தீஸ்கரில், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பழங்குடியின இளைஞர்களை சிறப்பு போலீஸ் அதிகாரிகளாக (Special Police Officers) ஆயுதம் ஏந்த வைத்து போராடவைத்தனர். இவர்கள் சல்வா ஜுடும் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்.
ஆனால், 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சுதர்ஷன் ரெட்டி, சல்வா ஜுடும் அமைப்பு சட்டவிரோதமானது என்று அறிவித்ததுடன், அவர்கள் உடனடியாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.அதே தீர்ப்பை இன்று அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி வருகின்றனர் என அமித் ஷா விமர்சித்துள்ளார்.
English Summary
Sudarshan Reddy is a candidate due to pressure from the Left Sudarshan Reddy is a Naxal supporter Amit Shah alleges