ரெட் கிராஸ் ஜெனீவா ஒப்பந்த தின விழா..மருத்துவத்துறையில் 2 விருது பெற்றவருக்கு பாராட்டு! - Seithipunal
Seithipunal


இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த ஜெனீவா ஒப்பந்த தின விழாவில் தமிழக அரசின் சிறந்த மருத்துவருக்கான இரண்டு விருதுகளைப் பெற்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மருத்துவர் திரு.NRTR.தியாகராஜன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ஜெனீவா ஒப்பந்த தின விழா  மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கல் சிறப்பாக நடைபெற்றது. 

விழாவுக்கு ரெட் கிராஸ் சேர்மன் மருத்துவர் NRTR.தியாகராஜன் அவர்கள் தலைமை வகித்தார் .துணை சேர்மன் திரு வீ.மகாராஜன் முன்னிலை வகித்தார். கௌரவச் செயலாளர் திரு க.சுருளிவேல் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும் துணை ஆட்சியருமான திரு.T.முத்துமாதவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

தமிழக அரசின் சிறந்த மருத்துவருக்கான இரண்டு விருதுகளைப் பெற்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மருத்துவர் திரு.NRTR.தியாகராஜன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பொருளாளர் திரு எஸ்.முகமது ஷேக் இப்ராஹிம்,  நிர்வாகச் செயலர் திரு எ.மீனாம்பிகை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் யூத் ரெட் கிராஸ் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ரெட் கிராஸ் மற்றும் ஜூனியர் கிராஸ் அமைப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும்  நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசர்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்கப்பட்டது.யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி லாவண்யா அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Red Cross Geneva Convention Day celebration Congratulations to the two award winners in the medical field


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->