பொய் வசூசை சொன்ன லியோ படக்குழு? 600 கோடிலாம் இல்ல; வருமான வரி தாக்கலால் அம்பலமான ஒரிஜினல் வசூல்..!
Did the Leo film crew claim false revenue Not 600 crores Original revenue exposed due to income tax
அதிக எதிர்பார்ப்புடன் வெளியான நடிகர் விஜய் நடித்த "லியோ" திரைப்படம், 600 கோடி வசூலித்ததாக கடந்த ஆண்டு தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். ஆனால் தற்போது வெளியான வருமான வரித் தாக்கல் தகவல்களின்படி, இப்படத்தின் உண்மையான வசூல் 404 கோடி ரூபாய் மட்டுமே என தெரியவந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜயுடன் சேர்த்து திரிஷா, மிஷ்கின், கெளதம் மேனன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், 2023ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக பேசப்பட்டது. வெளியான தருணத்திலிருந்து பாக்ஸ் ஆபீசில் அசத்தலான தொடக்கம் பெற்ற லியோ, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆனால், "600 கோடி வசூல்" என கூறப்பட்ட எண்ணிக்கையும், வருமான வரித் தாக்கலில் குறிப்பிடப்பட்ட 404 கோடி ரூபாய் வசூலும் இடையே உள்ள 200 கோடி ரூபாய் வித்தியாசம் தற்போது சூடான விவாதமாக மாறியுள்ளது.
இதனால், தயாரிப்பாளர்கள் வெளியிட்ட வசூல் எண்கள் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்களும், விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். "விளம்பரத்திற்காக வசூல் எண்களை உயர்த்தி காட்டினார்களா?" என்ற சந்தேகம் பரவுகிறது.
திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து எழுந்துள்ள இந்த புதிய சர்ச்சை, மீண்டும் லியோவை ரசிகர்கள் மத்தியில் பேச்சுப் பொருளாக மாற்றி இருக்கிறது.
English Summary
Did the Leo film crew claim false revenue Not 600 crores Original revenue exposed due to income tax