வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!இனி லைசென்ஸ், ஆர்சி புக் கொண்டு செல்ல தேவையில்லை!உங்க மொபைல் மட்டும் போதும்! - Seithipunal
Seithipunal


அவசரமாக வீடைவிட்டு கிளம்பும்போது, வாகன சாவி எடுத்தோமா, ஹெல்மெட் போட்டோமா என்று பார்த்தபடி, ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) அல்லது வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) எடுக்க மறந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதனால் சாலையில் போக்குவரத்து போலீசார் நிறுத்தி ஆவணங்களை கேட்கும் வேளையில் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலைகள் பலமுறை ஏற்படுகின்றன.

இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள ‘mParivahan’ செயலி மற்றும் ‘DigiLocker’ மூலம் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. இச்செயலிகளைப் பயன்படுத்தி, வாகன ஓட்டிகள் தங்கள் ஓட்டுநர் உரிமம், RC புக், இன்சூரன்ஸ், மாசுச் சான்றிதழ் (PUC) உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

முக்கியமாக, மத்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988 படி, இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அசல் ஆவணங்களுக்கு இணையாக சட்டப்படி செல்லுபடியாகும். எனவே நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இச்செயலியில் காண்பிக்கப்பட்ட ஆவணங்களை ஏற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

mParivahan App-இல் ஆவணங்களை சேமிக்கும் நடைமுறை

செயலியை பதிவிறக்கம் செய்தல்

Android பயனர்கள் Google Play Store-ல், iPhone பயனர்கள் App Store-ல் “mParivahan” எனத் தேடி பதிவிறக்கம் செய்யலாம்.

கணக்கை உருவாக்குதல்

செயலியைத் திறந்து, மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் சேர்த்தல் (My DL)

முகப்புப் பக்கத்தில் உள்ள My DL என்பதைத் தேர்வு செய்து, லைசென்ஸ் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.

அதன்பின் Add to My Dashboard என்பதைக் கிளிக் செய்தவுடன், டிஜிட்டல் லைசென்ஸ் உருவாக்கப்படும்.

  1. RC புக் இணைத்தல் (My RC)

My RC என்பதைத் தேர்வு செய்து, வாகன எண் (Registration Number) உள்ளிட வேண்டும்.

சரிபார்ப்பிற்காக Chassis Number மற்றும் Engine Number-ன் கடைசி 5 இலக்கங்களை பதிவு செய்தால், டிஜிட்டல் RC உருவாகும்.

செயலியின் முக்கிய அம்சங்கள்

ஆவணங்களின் நிலையை சரிபார்த்தல் : இன்சூரன்ஸ் மற்றும் PUC எப்போது காலாவதியாகிறது என்பதை அறியலாம்.

QR குறியீடு (QR Code) : ஆவணங்களில் வரும் QR குறியீட்டை அதிகாரிகள் ஸ்கேன் செய்து நம்பகத்தன்மையை உடனடியாக உறுதிப்படுத்தலாம்.

வாகன விவரம் அறிதல் : எந்தவொரு வாகனத்தின் பதிவு எண்ணை உள்ளிட்டாலும், அதன் உரிமையாளர் பெயர், மாடல், பதிவு தேதி போன்ற அடிப்படை விவரங்களை அறிய முடியும்.

ஆன்லைன் சேவைகள் : சாலை வரி செலுத்துதல், புதிய ஃபான்ஸி எண்ணுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இனி லைசென்ஸ், RC போன்ற அசல் ஆவணங்களை எடுத்து செல்ல மறந்துவிடுமோ என்ற கவலை தேவையில்லை.
ஆவணங்கள் தொலைந்துவிடும் அபாயம் இல்லாமல், மழையில் நனைந்து சேதமாவதற்கான அச்சமும் இருக்காது.

மொபைலில் செயலியைத் திறந்து காட்டினால் போதும் – அது சட்டப்படி செல்லுபடியாகும்.

அதனால், வாகன ஓட்டிகள் அனைவரும் mParivahan App மற்றும் DigiLocker ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news for drivers No need to carry your license or RC book anymore Just your mobile is enough


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->