உதவியாளரிடம் செருப்பை எடுத்துவரக் கூறிய கோட்டாட்சியர் - விழுப்புரத்தில் பரபரப்பு.!
sub collector order to asisstent take shoes in vilupuram
உதவியாளரிடம் செருப்பை எடுத்துவரக் கூறிய கோட்டாட்சியர் - விழுப்புரத்தில் பரபரப்பு.!
விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்டாலின் நகரில் அரசு புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வாழ்ந்து வந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்த ஆய்வு இன்று நடைபெற்றது. விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணாகுமாரி கலந்து கொண்டார்.
அங்கு அவர் காரிலிருந்து இறங்கும் போது, காலணி இல்லாமல் இறங்கி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் அந்த இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்யுமாறு அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கோட்டாட்சியர் பிரவீணாகுமாரி தன்னுடைய காலணி காரிலேயே இருப்பதை உணர்ந்து, அருகில் இருந்த தன் உதவியாளரை அழைத்து காரில் இருந்து காலணியை எடுத்து வருமாறு உத்தரவிட்டார். அதன் படி அவரும் காரில் இருந்து காலணியை எடுத்து வந்தார்.
இதனை அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் கவனித்து கோட்டாட்சியரின் உதவியாளரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதைப்பார்த்த மற்ற அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் கவனிப்பதை கோட்டாட்சியரின் உதவியாளருக்கு சைகை மூலம் எச்சரித்தனர்.
இதைப்பார்த்து உஷாரான அவர் காருக்கு பின்புறம் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் கையை மட்டும் நீட்டி காலணியை தரையில் வைத்துள்ளார். அங்கு வந்த கோட்டாட்சியர் காலணியை அணிந்து கொண்டு ஆய்வைத் தொடர்ந்தார். கோட்டாட்சியரின் இந்த செயலை கண்டு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் வேதனை அடைந்தனர்.
English Summary
sub collector order to asisstent take shoes in vilupuram