மாணவர்கள் பாராட்டு விழாவிற்காண கட்டுப்பாடுகளை அறிவித்த தவெக!
Students have announced the restrictions for the appreciation ceremony
சென்னையில் வரும் 28ம்தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை நடைபெற உள்ள பாராட்டு விழாவிற்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழக வெற்றி கழகம்.
சென்னையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 10 வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழா சென்னையில் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பாராட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கிட்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுகளை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடுகளை தமிழக வெற்றி கழகம் அறிவுள்ளது. நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை போல் பேப்பர்,பேனா கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விழாவில் மாணவர்களுடன் பெற்றோர் உடன் பிறந்தவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Students have announced the restrictions for the appreciation ceremony