கல்விக் கட்டணம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி..மாணவர்கள் கூட்டமைப்பு  கண்டனம்! - Seithipunal
Seithipunal


ஆதிதிராவிட நலத்துறை மற்றும் தலைமை செயலகத்தின் அலட்சிய போக்கினால் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரையிலான கல்விக் கட்டணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்;புதுச்சேரி மாநிலத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் மூலமாக ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரையிலான இலவச கல்வி உதவித்தொகை  வழங்கப்பட்டு வருகிறது, சமீபகாலமாக அத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி காலதாமதமாக வழங்கப்படுவதால் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த கல்வி ஆண்டு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்விக்கான கட்டணத் தொகை பல கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக சென்று சேரவில்லை இதனால் கல்லூரி நிர்வாகங்கள் தரும் அழுத்தத்தில் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் பலமுறை சம்பந்தப்பட்ட துறையை அணுகினாலும் முறையான பதில் இதுனால் வரை  கிடைக்கவில்லை. துறை சார்ந்த இயக்குனர் பல்வேறு பணிகளில் இருக்கக்கூடிய காரணத்தினால் அவரை நேரில் சந்திப்பது கடினமாக உள்ளது.  இத்தகைய போக்கால் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்

கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்வி உதவித் தொகைக்கு போராடி பெற வேண்டிய சூழ்நிலையில் தான் சம்பந்தப்பட்ட துறை உள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களில் காலத்தாமதமான மதிப்பெண் வெளியீடு செய்வதனால் இக்கட்டணத்திற்கு விண்ணப்பிக்க காலதாமதம் ஏற்படுவதை பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அரசு அதனை கண்டு கொள்ளவில்லை.  தலைமைச் செயலர், துறை செயலர்கள் மாணவர்கள் மீது அக்கறை காட்டாமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதே இக்காலத் தாமதத்திற்கு காரணம் என உணர்கிறோம். 

எனவே இதற்கு மேலும் காலதாமதம் செய்யாமல் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கட்டண பாக்கித் தொகையை உடனடியாக மாணவர்களுக்கு செலுத்தவில்லை என்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒன்று திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அரசினை எச்சரிக்கை செய்கிறோம் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Students are suffering without getting the education fee The student union condemns


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->