தந்தை இறந்த துக்கத்திலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி.! - Seithipunal
Seithipunal


தந்தை இருந்த துக்கத்திலும் மாணவி ஒருவர் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மூர்த்தி (வயது 57). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஜெயலட்சுமி என்ற பெண் திருவெற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று கடைசி தேர்வு என்பதால் மாணவி ஜெயலட்சுமி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை மூர்த்தி திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதில் தேர்வு எழுத தயாரான மாணவி ஜெயலட்சுமி நிலைகுலைந்து போனார்.

தந்தை இறந்த துக்கத்தில் இருந்த மாணவி ஜெயலட்சுமி தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நேற்று பொதுத்தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு பள்ளியில் ஜெயலட்சுமிக்கு அவருடன் படிக்கும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். தந்தை இறந்த துக்கத்திலும் மகள் பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

student wrote the 10th class public examination even in grief of her father's death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->