ஜூடோ போட்டியில் பங்கேற்க இருந்த மாணவனுக்கு நேர்ந்த சோகம்! 3 மின்வாரிய ஊழியர்கள் மீது வழக்கு!
student happened tragedy 3 electricity employees against case
மதுரை கோச்சடை பகுதியில் மின்கம்பம் மாற்றும்போது கயிறு அருந்து விழுந்ததில் கல்லூரி மாணவரின் கால் துண்டான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோச்சடை பகுதியில் மின்வாரிய ஊழியர்கள், பழுதான மின்கம்பத்தை கிரேன் மூலம் அகற்றி மற்றொரு புதிய மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வழியாக மகேஸ்வரன் என்ற மாணவன் தனது நண்பர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கயிறு அறுந்ததில், அவரது கால் மீது மின்கம்பம் விழுந்து இடது கால் தூண்டானது.
இவர் ஓரிரு வாரங்களில் நடைபோட உள்ள மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கலந்து கொள்ள இருந்த நிலையில் அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது, அவரது குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த விதமான பாதுகாப்பு மற்றும் முன்னறிவிப்பு இன்றி பணிகள் மேற்கொண்ட மின்சார வாரிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் தந்தை புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேர் உள்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
student happened tragedy 3 electricity employees against case