மழை வேண்டி நூதன வழிபாடு., திருப்பூர் அருகே சுவாரசிய திருவிழா..! - Seithipunal
Seithipunal


பருவமழை சரியாக பொழிய வேண்டி கிராம மக்கள் நூதன முறையில் வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம். சாமராயபட்டியில் உள்ள பாப்பம் பாறாய் ஒன்று உள்ளது. அதில் கல்யாண விநாயகர், ஆதிகேசவப்பெருமாள், சுப்பிரமணியர் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் நூறாண்டு பழமை வாய்ந்தவை.

இந்த கோவிலில் பருவமழை சரியா பொழிய கோரி ஒவ்வொரு ஆண்டும் கிராம மக்கள் ஒன்று கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த வழிப்பாட்டில் காய்ச்சி சாமிக்கு படையல் வைத்து வணங்குகின்றனர்.

பின்னர் அந்த கஞ்சியை பாறையில் ஊற்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். கஞ்சியை சாப்பிட பாத்திரங்கள் எதுவும் பயன்படுத்துவதில்லை. இந்த திருவிழா பல ஆண்டுகளாக அங்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழிபாடு முடிந்ததும் அந்த பகுதியில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Strange worship for rain


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal