விபூதியில் வைத்த விபரீதம்...! மாந்திரீகம் என்ற பெயரில் பெண்ணைச் சீரழித்த போலி மாந்தீரிகனை வேட்டையாடும் காவலாளர்கள்...!
strange thing that put body guards hunting down fake witch who corrupted woman name witchcraft
கரூர் அருகே குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக நம்பவைத்து, மாந்திரீகத்தின் பெயரில் பெண்ணை ஏமாற்றிய மர்மநபர், மயக்க மருந்து கலந்த விபூதி கொடுத்து மயக்கமடையச் செய்து, அவரிடம் அத்துமீறி நகைகளையும் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் கம்பங்கூழ் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், அங்கு வந்த உறவினரிடம் குடும்பத்தில் நிலவி வந்த சிரமங்கள் குறித்து பகிர்ந்து பேசியுள்ளார்.

அந்த உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த மர்மநபர் ஒருவர், வாடிக்கையாளராக நடித்து கடைக்கு வந்து கம்பங்கூழ் வாங்கியபடி அந்த பெண்ணுடன் பேச்சு தொடங்கியுள்ளார்.பின்னர், “உங்கள் குடும்ப கஷ்டங்களை நீக்கி தர முடியும். அதற்காக சிறிய மாந்திரீகம் செய்ய வேண்டும்” என நம்பிக்கை அளித்துள்ளார்.
அவரது பேச்சை நம்பிய அந்த பெண், அதற்கு சம்மதித்ததாக தெரிகிறது.இதையடுத்து, கடைக்குள் அழைத்துச் சென்ற மர்மநபர், தன்னிடம் இருந்த விபூதியை கொடுத்து அதை வாயில் போடுமாறு கூறியுள்ளார். அதனை நம்பி எடுத்துக்கொண்ட பெண், சில நிமிடங்களிலேயே மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
பெண் மயக்க நிலையில் இருந்ததை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன், அவர் அணிந்திருந்த அரை பவுன் தாலி, அரை பவுன் மோதிரம் மற்றும் கால்விரலில் அணிந்திருந்த வெள்ளி மெட்டி ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த பெண், தன் நிலையை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக பாலவிடுதி காவலர் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற காவலர்கள் விசாரணையை தொடங்கினர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மர்மநபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
strange thing that put body guards hunting down fake witch who corrupted woman name witchcraft