மரண பொறியான கல் குவாரி...! - பள்ளத்தில் விழுந்து 2 பேரின் உயிர் பறிபோன சோகம்...!
stone quarry death trap Tragedy 2 people lost their lives after falling ditch
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பாழடைந்த கல் குவாரி பள்ளத்தில் பாய்ந்ததில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் விருசடி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் டிராவிட் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சாலையோரத்தில் இருந்த பாழடைந்த கல் குவாரி பள்ளத்திற்குள் வாகனம் நேராக பாய்ந்தது.குவாரி பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்ததால், வாகனத்துடன் பள்ளத்திற்குள் விழுந்த இருவரும் நீரில் மூழ்கினர்.
இந்த விபத்தில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், அஞ்சுகிராமம் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எச்சரிக்கை பலகைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் இல்லாத பாழடைந்த கல் குவாரிகள் உயிருக்கு ஆபத்தாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த கோர விபத்து, விருசடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
stone quarry death trap Tragedy 2 people lost their lives after falling ditch