செஞ்சியில் பரபரப்பு: வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் 4 லட்சம் மதிப்புள்ள தாலி சங்கிலி திருட்டு...! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை மர்மநபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி செல்வி (45). இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கியுள்ளார்.

மறுநாள் காலையில் கண்விழித்த செல்வி, தனது கழுத்தை பார்த்தபோது தாலி சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டைச் சுற்றிலும் தேடியும் சங்கிலி கிடைக்கவில்லை.செல்வி வீட்டிற்கு வெளியே தூங்குவதை முன்கூட்டியே நோட்டமிட்ட மர்மநபர், நள்ளிரவில் அங்கு வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, அவரது கழுத்தில் இருந்த 3.25 பவுன் தாலி சங்கிலியை நைசாக பறித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.திருடுபோன நகையின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி, சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

செல்வி அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடியவர்கள் குறித்தும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் குறித்தும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபரை அடையாளம் கண்டு கைது செய்ய காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.திருட்டு நகை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Senji stir Thali chain worth 4 lakh stolen from woman sleeping outside her house


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->