தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை! முதல்வர் மு.க.ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது,  அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கியத் திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம் என்றும், எனது தலைமையிலான இந்த அரசு உயர்கல்வியின் பொற்காலமாக திகழும் என்றார்.

இது மாணவர்களுக்கான அரசு என்பதில் பெருமைகொள்கிறேன். இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மேலும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalin says desire is that Tamil Nadu students should be superior


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->