இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 6 பேர் மீது கொடூர தாக்குதல்.!
Sri Lankan pirates brutally attacked 6 fishermen from Tamil Nadu
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல் இலங்கை கடற்கொள்ளையர்கள் அவ்வப்போது தமிழக மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து வலை மற்றும் மீன்களை திருடி செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் நாகை மீனவர்கள் 6 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 4 இலங்கை படகுகளில் வந்த 12 கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.

மேலும், கையில் வைத்திருந்த இரும்பு பைப், கத்தி, தடி போன்ற ஆயுதங்களால் நாகை மீனவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் நாகை மீனவர்களின் படகில் இருந்த மீன்கள், வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் உள்ளிட்ட சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து சக மீனவர்களின் உதவியோடு நாகை மீனவர்கள் புஷ்பவனம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிரிச்சிட்டாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய எல்லையில் மீன் பிடித்தாலும் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sri Lankan pirates brutally attacked 6 fishermen from Tamil Nadu