தலைவர்களை இழிவுபடுத்திய ஆன்மிக சொற்பொழிவாளர் அதிரடி கைது!
spiritual speaker insulted leaders arrested
அம்பேத்கர், வள்ளுவர் போன்ற தலைவர்களை இழிவுபடுத்தி பேசியதாக தெரிவித்து ஆன்மீக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷித் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.பி.வி.எஸ் மணியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆர்.பி.வி.எஸ் மணியன் அம்பேத்கர், திருவள்ளுவர் உள்ளிட்ட தலைவர்களை இழிவாகவும் அவதூராகவும் பேசியிருந்தார்.
அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. அவரது பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் போன்ற பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

பலரும் சமூக வலைதளங்களில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆர்.பி.வி.எஸ் மணியன் வீட்டில் இன்று அதிகாலை சென்னை தெற்கு காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ் மணியனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
spiritual speaker insulted leaders arrested