ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: முன்னாள் காவல் ஆணையர் உள்ளிட்டோரின் தலையீடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை..! - Seithipunal
Seithipunal


'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் அருணின் தலையீட்டின் காரணமாக, வீரமணி, சாந்தியின் பெயர் புகாரில் குறிப்பிட்டிருந்தும் காவல் துறையினர் சரிவர விசாரிக்காத காரணத்தினால், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அவர்  தாக்கல் செய்த அந்த மனுவில், வழக்கை மூட 40 கோடி ரூபாய் வரை பணம் கைமாறியுள்ளதாகவும், வழக்கை மூடியது குறித்தும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆதாரங்களை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வழங்கும்படி வாராகிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு, இன்று நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாராகி தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அக்டோபர் 1 மற்றும் 6-ஆம் தேதிகளில் சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகி, ஆதாரங்களை சமர்ப்பித்ததாகத் கூறப்பட்டது.

அதன்பின்னர், சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் குறிப்பிடுகையில், வழக்கின் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளதாகவும்,மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

 அத்துடன், விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும்,  அடுத்த கட்ட அறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், விசாரணை முறையாக நடந்து வருவதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும், வழக்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா சிறப்பாக விசாரித்து வருகிறார் என்று பாராட்டு தெரிவித்த நீதிபதி, காவல் துறை தரப்பில் அடுத்த கட்ட அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, விசாரணையை அக்டோபர் 26-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special Investigation Team probes alleged interference by former Police Commissioner and others in the Gem Veeramani POCSO case


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->