தமிழகத்தில் முதல் முறையாக நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு ஊழியர்களும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, நகர்ப்புற உள்ளாட்சிகளின் பணியாளர்களையும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் வகையில் தமிழக அரசு சட்டத்தை இயற்றி அறிவித்தது.  அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ள  நிலையில், அச்சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. 

அதன்படி, நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் நகராட்சி, மாநகராட்சி இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக எழுத்தர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு நகராட்சி கவுன்சில் பணியின்கீழ் இளநிலை உதவியாளர் பதவியில் 119 காலியிடங்களும், வருவாய் உதவியாளர் பதவியில் 96 காலியிடங்களும், தட்டச்சர் பதவியில் 260 இடங்களும், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) பதவியில் 16 இடங்களும் உள்ளன. 

அத்துடன், தமிழ்நாடு மாநகராட்சி பணியின்கீழ் இளநிலை உதவியாளர் பதவியில் 70 காலியிடங்களும், நேர்முக எழுத்தர் பதவியில் 60 இடங்களும் இடம்பெற்றுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி பணியில் இளநிலை உதவியாளர் பதவியில் 134 காலியிடங்களும், பில் கலெக்டர் பதவியில் 107 காலியிடங்களும், தட்டச்சர் பதவியில் 56 காலியிடங்களும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 28 இடங்களும் உள்ளன. 

இதில், இளநிலை உதவியாளர் பதவிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் பதவிக்கு கூடுதலாக தட்டச்சு தேர்வுகளிலும், அதேபோல் நேர்முக எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு கூடுதலாக சுருக்கெழுத்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் (தமிழ்நாடு மின்சார வாரியம்) இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவியில் 422 காலிப்பணியிடங்களும் குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு பி.காம் பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த குரூப்-4 தேர்வு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட 46 விதமான பதிவிகளில் 6,574 காலி்ப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நவ.5-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தே்ர்வுக் கட்டணத்தை யுபிஐ வசதி மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்." என கூறியுள்ளார்.

அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப்-4 தேர்வில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் காலியிடங்களாவது இடம்பெறும் என தேர்வர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 6574 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது தேர்வர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. குரூப்-4 தேர்வில் காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

For the first time in Tamil Nadu municipal and corporation staff to be recruited through TNPSC


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->