கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் - முழு விவரம்!
special bus for Thiruvannamalai 29112022
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தொலைதூரபயணிகளின் வசதிக்காக கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில், தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை. மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் 05/12/2022 மற்றும் 06/12/2022 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.

முன்பதிவு : இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in. மற்றும் tnstc official app, ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு : மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை 9445014426. திருநெல்வேலி 9445014430, 9445014428, நாகர்கோவில் கோயம்புத்தூர் 9445014435, 9445014432. தலைமையகம் தூத்துக்குடி 9445014435, 9445014424 மற்றும் 9445014416, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே, திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

முன்னதாக கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
special bus for Thiruvannamalai 29112022