தவெகவில் செங்கோட்டையனுக்கு போஸ்டிங் இதுதானா? எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறாரா செங்கோட்டையன்? - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்ற தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாகவே அரசியல் வட்டாரத்தை சூடாக்கி வருகின்றன. இந்த நிலையில், செங்கோட்டையன் இன்று (26ம் தேதி) தன்னுடைய எம்எல்ஏ பதவிக்கு ராஜினாமா செய்ய உள்ளார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நடைபெற்ற தேவர் குருபூஜை நிகழ்வில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் ஒரே காரில் சென்று, ஒன்றாகவே செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் பெரிய அதிர்வை ஏற்படுத்தினார். இதற்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து செங்கோட்டையனையும், அவரது ஆதரவாளர்களான 2000 பேரையும் நீக்கி உத்தரவிட்டது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட உடனே, செங்கோட்டையன் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவத் தொடங்கின. ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட தவெக நிர்வாகிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், நாளை அல்லது நாளை மறுநாள் விஜயை நேரில் சந்தித்து உறுப்பினராவார் என்றும் கூறப்படுகிறது.

செங்கோட்டையன் நேற்று இதுகுறித்து இருந்து கேட்கப்பட்ட கேள்விகளை மறுத்தும் இல்லாமல், உறுதிப்படுத்தவும் இல்லாமல் அமைதியாக நடந்து கொண்டது, இந்த தகவல்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. தற்போது அவர் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வந்திருப்பதாகவும், இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தவெகவில் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட உள்ள பதவி:
• அமைப்பு பொதுச் செயலாளர்
• விஜய் அமைத்திருக்கும் 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அவரது பொறுப்பில் ஒப்படைக்கலாம்

அதிமுகவில் நீண்டகால அனுபவம், கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையனின் பெரும் செல்வாக்கு ஆகியவை, அவர் தவெகவில் சேர்ந்தால் அந்தக் கட்சிக்கு பெரிய பலமாக மாறும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

வரும் 30ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்த உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே செங்கோட்டையன் தனது அரசியல் முடிவை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

செங்கோட்டையன் உண்மையில் தவெகவில் இணைவாரா? இன்று அவரது ராஜினாமா நடைபெறுமா? — என்ற கேள்விகளுக்கான பதில் சில மணி நேரங்களில் வெளிப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is this the posting for Tvk Sengottaiyan Is Sengottaiyan resigning from his MLA post


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->