2026 தேர்தலை குறிவைத்து அதிமுக அவசர ஆலோசனை — மா.செ.க்களுக்கு வாய்ப்பூட்டு போட்ட எடப்பாடி பழனிசாமி! கூட்டணி குறித்து கப்சிப்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் முழு மாநிலத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கி வைத்துள்ளது. இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ராயப்பேட்டையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் 82 மாவட்ட செயலாளர்கள் காணொளி காட்சி மூலம் இணைந்தனர். இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, மருத்துவர் அணியினரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி,“வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் அதிமுகவினர் விழிப்புடன் செயல்பட வேண்டும். தொகுதி வாரியாக உள்ள குளறுபடிகளை கண்டறிந்து உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்,”என்று மாவட்ட செயலாளர்களுக்கு நேரடி உத்தரவு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஏற்கனவே எஸ்.ஐ.ஆர். பணிகளில் தீவிரமாக இறங்கியிருப்பதை கருத்தில் கொண்டு, அதிமுக நிர்வாகங்களும் இதே வேகத்தில் செயல்பட வேண்டும் என எடப்பாடி வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒவ்வொரு மாவட்டமும் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் பூத் அமைப்பு ஏற்கனவே நிறைவடைந்ததாகவும்,“மாவட்ட செயலாளர்கள், பூத் மட்ட நிர்வாகிகள் இணைந்து இந்தப் பணிகளின் முன்னேற்றத்தை தலைமையகத்திற்கு முறையாகத் தெரிவிக்க வேண்டும்”என்று அவர் அறிவுறுத்தினார்.

இதோடு, வரும் டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம், 2026 தேர்தலுக்கான முக்கியமான மேடையாக இருக்கும் என்றும் அதில் பெரிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி,கட்சியை விட்டு பிரிந்தவர்களைப் பற்றி பொதுவெளியில் யாரும் கருத்து சொல்லக்கூடாது,கூட்டணி, கூட்டணி கட்சிகள் குறித்து ஊடக பேட்டிகளில் எந்த நிர்வாகியும் பேசக்கூடாது,என்று கடுமையாக எச்சரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 தேர்தல் முன்னோட்டமாக அரசியல் சூழல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவின் இந்த உள் ஒருங்கிணைப்பு கூட்டம், வரும் மாதங்களில் கட்சியின் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK urgent consultation targeting 2026 elections Edappadi Palaniswami gives an opportunity to the MLAs Gossip about the alliance


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->