தனிக் கட்சி தொடங்கும் ஓபிஎஸ் — என்டிஏ கூட்டணியா? தவெகவா? பின்னணி கணக்குகள் என்ன?
Is OPS starting a separate party an NDA alliance Is it a Tvk What are the background accounts
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் பயணத்தில் மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளார். இனி தனி கட்சி தொடங்கும் பாதையில் ஓபிஎஸ் செல்லவுள்ளதாகத் தெரிகிறது. இந்த முடிவுக்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பகுப்பாய்வு செய்கின்றன.
சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உரிமை மீட்பு குழு, இனி “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்” என்ற பெயரில் செயல்படும் என அறிவித்தது. மேலும், கூட்டணி குறித்த முடிவை எடுப்பதற்கான முழு அதிகாரமும் ஓபிஎஸுக்கு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பேசின ஓபிஎஸ்,“டிசம்பர் 15க்குள் நல்ல முடிவு எடுக்காவிட்டால்… எடுக்கும் நடவடிக்கை அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக இருக்கும். திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்.”என்று வாக்குச் சத்தமே இல்லாமல் எச்சரிக்கை விட்டார்.
ஆனால் அதே நேரத்தில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட போது,“என்டிஏ கூட்டணியில் மீண்டும் சேர முடிய வாய்ப்பு இருக்கிறது… அரசியலில் எதுவும் நடக்கலாம்.”என்று பேசிய ஓபிஎஸ் – அடுத்த நாளே புதிய கட்சி அமைப்பை அறிவித்தது விசேஷ கவனத்தை ஈர்த்திருக்கிறது.
1. அதிமுகவில் திரும்ப வாய்ப்பில்லை – 2026ல் போட்டியிடும் வழி தேவை
அதிமுக நிர்வாகத்தில் ஒற்றைத் தலைமை அமலான பிறகு, ஓபிஎஸுக்கு திரும்ப வாய்ப்பு முற்றிலும் குறைந்துவிட்டது. இதேசமயம், அவருடன் இருந்த மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் திமுகவுக்கு செல்ல ஆரம்பித்ததால், தன்னுடன் இருக்கும் ஆதரவாளர்களுக்குப் பதவி தர முடியும் வாய்ப்பு குறைந்து விட்டது.
எனவே,“தனி கட்சியாக போட்டியிடாத பட்சத்தில், அவரின் அரசியல் அடையாளமே பாதிக்கப்படும்”
என்று ஓபிஎஸ் கணித்திருக்கிறார்.
2. என்டிஏ கூட்டணியில் சேர ஓபிஎஸ் விருப்பம் – அதிமுக வாய்ப்பு இல்லாததால் தனிக் கட்சி தேவை
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ் — தொடர்ந்தும் என்டிஏவில் இருக்க விரும்புகிறார். ஆனால் அதிமுகவுடன் அவரை இணைக்க பாஜகவால் முடியவில்லை.
அதிமுகவில் செல்லக்கூடாது, அதேசமயம் என்டிஏவில் இருக்க வேண்டும் என்ற நிலைமையில்,தனி கட்சி தொடங்கி பாஜக கூட்டணியில் இடம் பெற்றுக் கொள்வது தான் ஒரே வழி என்று ஓபிஎஸ் முடிவு செய்திருக்கலாம்.
ஓபிஎஸ் என்டிஏவுடன் சேர வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. சிலர், விஜயின் தவெகவுடனும் ஓபிஎஸ் பேச்சு நடக்கலாம் எனக் கூறுகின்றனர்.டிசம்பர் 15 ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பெரிய அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 தேர்தலை முன்னிட்டு,ஓபிஎஸ் – பாஜக – தவெக என மூன்று தரப்பிலும் புதிய அரசியல் கணக்குகள் அடுத்த வாரங்களில் வெளிப்படும் வாய்ப்பு அதிகம்.
English Summary
Is OPS starting a separate party an NDA alliance Is it a Tvk What are the background accounts