'ஜனநாயகன்' ஆடியோ வெளியீடு: விஜய்யின் குட்டி ஸ்டோரியோடு தளபதி திருவிழா கச்சேரி ஏற்பாடு..! - Seithipunal
Seithipunal


தமிழசினிமாவில் இப்போது நம்பர் 01 நடிகர் பாக்ஸ் ஆபீஸ் கிங் நடிகர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஜனநாயகன்'. இந்த படம் விஜய் அவர்களின் அரசியல் வருகையால் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களையும் தாண்டி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் மேனன் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் வெளியீடாக 2026 ஜனவரி 09-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

ஜனநாயகம் படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 50 நாட்களுக்கு குறைவாகவே உள்ளது. இதனால் படம் சம்பந்தப்பட்ட புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தினம் அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22-ஆம் தேதி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. 

பின்னர், நவம்பர் 08-ஆம் தேதி 'தளபதி கச்சேரி' என்ற முதல் சிங்கிள் வெளியானது. இதனைத் தொடர்ந்து 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா  டிசம்பர் 27-ஆம் தேதி, மலேசியா, கோலாலம்பூரில் Bukit Jalil Stadium-இல் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

தற்போது மலேசியாவில் இசை வெளியீட்டு விழாவிற்கான வேலைகளும் பரபரப்பாக தொடங்கியுள்ளன. இந்த நிகழ்வை டிக்கெட் வாங்கி பார்க்கும் விதத்தில் நடத்த இருக்கிறார்கள். இதற்கான முன்பதிவுகள் Ticket 2 U என்ற தளத்தில் நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, படத்தின் இசைவெளியீட்டு நிகழ்வுக்கு டிக்கெட் அவசியமா.? என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு சூப்பரான தகவல் ஒன்று பதிலாக வெளிவந்துள்ளது. இது வெறுமனே 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு நிகழ்வாக இல்லாமல், தளபதி விஜய் இதுவரை நடித்த படங்களில் இருந்து முக்கியமான 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி 'தளபதி திருவிழா' என்ற பெயரில் ஒரு கான்செர்ட் ஆக நடத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் சைந்தவி, திப்பு, அனுராதா ஸ்ரீராம், ஆண்ட்ரியா, சரண், ஹரிசரண், ஹரீஷ் ராகவேந்திரா, யோகி பி, விஜய் யேசுதாஸ் உட்பட பல இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு அவர்கள் விஜய் படத்தில் பாடிய பாடல்களை பாட இருக்கின்றனர். இதனோடு சேர்த்து 'ஜனநாயகன்' பட பாடல்களை வெளியிட இருக்கின்றனர். எனவே, இந்த முறை விஜயின் குட்டி ஸ்டோரிக்கு முன்பு, பெரிய இசை கச்சேரியும் நடைபெறவுள்ளமை ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thalapathy festival concert organized with Vijays short story at Jana Nayagan audio release


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->