“என்னை மோசமான ஆளாக ஆக்கிவிட்டீர்கள்!”ஏன் சிவகுமாரை விட்டுட்டீங்க.. — கங்கை அமரன் விளக்கம்! - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முக திறமைகள் கொண்ட கங்கை அமரன், மறைந்த பாடலாசிரியர் வாலியின் பிறந்தநாள் விழாவில் நடந்த சம்பவத்தைப் பற்றி முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், செய்தியாளர்களிடம் கங்கை அமரன் பேட்டி அளிக்கும் போது, அவரின் பின்னால் நின்றிருந்த ஒருவர் பேச ஆரம்பித்ததால் ஏற்பட்ட சங்கடமான தருணம் சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சனத்தை கிளப்பியது.

அந்த நேரத்தில் கங்கை அமரன், “நீங்களே பேசுங்க” என்று பின்னால் நின்றவரிடம் வைத்த சொல்லை, அவர் உண்மையாக எடுத்துக் கொண்டு பேசி ஆரம்பித்தார். இதனால் பேட்டி இடைநிறுத்தப்பட்டு குழப்பம் ஏற்பட்டது. அந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி, கங்கை அமரன் ரசிகரை அவமானப்படுத்தினார் என பலர் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரத்துக்கு இன்று விளக்கம் அளித்த கங்கை அமரன்,“ஒரு ஆள் வளர்ந்த பிறகு, அவரிடம் என்ன தவறு என்று நோட்டுக்கு எடுத்துக்கொள்ள பலர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். பின்னால் நின்று அவர் கேமராவை பார்த்து சைகை செய்துகொண்டிருந்தார். அதைச் சொன்னதையே எடுத்துக் கொண்டு என்னை மோசமான ஆளாக காட்டிவிட்டார்கள். சிவகுமாரும் அதுபோல ஃபோனை தட்டிவிட்டார். யாராவது எதாவது செய்தீர்களா?”என்று கேள்வி எழுப்பினார்.

சம்பவம் சின்ன misunderstanding ஆனாலும், சமூக வலைதளங்களில் தவறாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதில் கங்கை அமரன் வருத்தம் தெரிவித்தார்.

கலைத் துறையில் நீண்டகால அனுபவம் கொண்டவரான கங்கை அமரன், இப்போது புதிய படங்களில் நடிப்பதிலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You made me a bad person Why did you leave Sivakumar Gangai Amaran explains


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->