கள்ளச்சாரய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்.!!
special assistant inspector ramalinga suspend for link fake liquar salesman
கள்ளச்சாரய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்.!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயப்பாளையம், சின்னசேலம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது, வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இதனை தடுக்கும் விதமாக மதுவிலக்கு மற்றும் சட்ட ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தாலும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டுதான் வருகிறது.
அதனால், கள்ளச்சாராயத்தை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது. அதிலும் குறிப்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மட்டுமின்றி அதை விற்பவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ள காவல் அதிகாரிகள் ,காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கள்ளக்குறிச்சியில் துணை காவல் ஆய்வாளராக பணிபுரிந்த சந்திரன், நில அபகரிப்பு எதிர்ப்பு மற்றும் சிறப்பு பிரிவில் பணிபுரிந்த கிள்ளிவளவன் உள்ளிட்டோர் நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அத்துடன் சிறப்புப் காவல் ஆய்வாளராக உளுந்தூர்பேட்டையில் பணிபுரிந்த ராமலிங்கம் உள்ளிட்ட சிலரும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தததாக ல்வராயன் மலையில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராமலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கதவர் ராமலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
special assistant inspector ramalinga suspend for link fake liquar salesman