பிணத்தை சுமந்தவாறு, மிதந்து செல்லும் அவலம்.. கள்ளக்குறிச்சி அருகே பொதுமக்கள் வேதனை.!
Son take mother body cross river in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே உள்ள புதூர் எனும் கிராமத்தில் 150கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்ற 55 வயது நபர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார். உடலை அவருடைய அருகில் இருக்கும் மயானதிற்கு எடுத்துச் செல்ல பாலம் இல்லாத காரணத்தால் முழங்கால் அளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இந்த கிராம மக்கள் பயன்படுத்தும் மயானம் மணிமுத்தா ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல ஒவ்வொரு முறையும் அவர்கள் ஓடையை கடந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ஓடையில் எப்போதும் நீர் இருந்து கொண்டே இருப்பதால் உயிரிழந்த சடலங்களை தண்ணீரில் மிதந்தவாறு அவர்கள் கையில் ஏந்தி செல்லும் நிலை இருக்கிறது.

மேலும் ஓடையில் மழை பெய்து தண்ணீர் அதிகம் வரும் நேரங்களில் மயானத்திற்கு உடலை தூக்கிச் செல்ல முடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தினால் மிகுந்த ஆபத்தான முறையில் உடலை சுமந்து கரையை கடப்பார்களாம்.
சில நேரங்களில் அதுவும் முடியவில்லை என்றால் ஆற்றங்கரை ஓரத்திலேயே உடலை புதைத்து விடுவார்களாம். துக்க நிகழ்ச்சியும் நடத்த முடியாமல் போவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகத்திற்கு ஓடை மூலமாக மயானத்திற்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Son take mother body cross river in kallakurichi