மது போதையில் தந்தையை கொன்ற மகனுக்கு வலைவீச்சு., கோவையில் நடந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


மது போதையில் தந்தையை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை பீளமேடு நாராயணசாமி வீதியில் வசித்து வருபவர்  துரைராஜ் (73). இவருக்கு ரவிராஜ் (49) என்ற மகன் இருக்கிறார். ரவிராஜ்க்கு திருமணமாகி குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ரவிராஜ்க்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது அருந்திவிட்டு குடும்பத்தினருடன் தகராற்றில் ஈடுப்பட்டு வந்துள்ளார். சம்பவதன்று, ரவிராஜ் மது போதையில் தனது தந்தை வீட்டிற்கு சென்று தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது, துரைராஜ்ஜுக்கும் மகனுக்கு வாக்குவாதம் ஏற்படவே மதுபோதையில் தந்தை என பாராமல் அவரை தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த துரைராஜீயை தலை முடியை பிடித்து தரையில் அடித்து தாக்கினார். 

இதில், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து ரவிராஜ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அங்கு வந்த துரைராஜீன் மனைவி கணவனின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு  செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மதுபோதையில் மகனே தந்தையை கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து தப்பியோடிய ரவிராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son murder his own son near Coimbatore


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal