உயிருடன் இருக்கும் தாய்க்கு சிலை வைத்து கோயில் கட்டிய மகன்.. வைரல் புகைப்படம்.!
Son build mother statue and temple in namakkal
நாமக்கல் அருகே உள்ள ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய தாயார் மணி. இதில் இவருடைய தந்தை வாசு சிறு வயதிலேயே இறந்து விட்டார்.
இதில் தாயார் மணி தனது குழந்தைகளை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வளர்த்து வந்துள்ளார். இதனால் பிரபுவுக்கு உயிருடன் உள்ள தனது தாயருக்கு சிலை வைத்து கோயில் கட்ட வேண்டும் என்பது சிறு வயது முதலே ஆசையாக இருந்து வந்துள்ளது.

அந்த வகையில் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கும் தனது தாயருக்கு நன்றி செலுத்தும் வகையில் தனது வீட்டிற்கு அருகே 1200 சதுர அடி நிலம் வாங்கி கோயில் போன்று கட்டி அதில் மூன்று அடி உயரத்தில் தனது தாயாருக்கு சிலை வைத்துள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து பேசிய பிரபு நான் சிறு வயதாக இருக்கும் போதே எனது தந்தை இறந்து விட்டார். ஆனால், என் தாயார் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து என்னை வளர்த்தார். எனவே நான் அவரை மரியாதை செலுத்த நினைத்தேன். இறந்த பின்னர் பிண்டம் வைத்து திதி கொடுப்பதை விட உயிருடன் இருக்கும்போது தாயாருக்கு சிலை வைத்து அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது தற்பொழுது நிறைவேறி உள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
Son build mother statue and temple in namakkal